பொருட்பால்

மனிதன் எப்படிப் வாழ வேண்டும், எத்தகைய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறும் பகுதி தான்அறத்துப்பால்

அதிகாரம் 59 : ஒற்றாடல்

குறள் 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்

மு.வ விளக்கம்:

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேண்டும்.

குறள் 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை
எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்

மு.வ விளக்கம்:

அனைத்திலும் நடைபெறும் நிகழ்வுகளையும் எப்பொழுதும் ஒற்றரைக் கொண்டு விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

குறள் 583

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா
மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில்

மு.வ விளக்கம்:

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெற வழி வேறு இல்லை.

குறள் 584

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வதொற்று

மு.வ விளக்கம்:

தம்முடைய தொழிலைச் செய்பவர், சுற்றத்தார் மற்றும் பகைவரைச் சேர்ந்த அனைத்து சம்பவங்களையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

குறள் 585

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

மு.வ விளக்கம்:

சந்தேகப்படாத தோற்றத்துடன், பார்ப்பவருடைய கண் பார்வைக்கும் அஞ்சாமல் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமல் இருப்பதே ஒற்றன்.

குறள் 586

துறந்தார் படிவத்தராக்கி இறந்தாராய்ந்து
என்செயினுஞ் சோர்விலதொற்று

மு.வ விளக்கம்:

அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, எவ்விதத் துன்பமும் வந்தாலும் சோர்வில்லாதவனே ஒற்றன்.

குறள் 587

மறைந்தவை கேட்கவற் றாகி
அறிந்தவை ஐயப்பாடில்லதே ஒற்று

மு.வ விளக்கம்:

மறைவாக நடந்த செயல்களையும் கேட்டு அறிய வல்லவனும், அறிந்தவற்றில் ஐயப்படாமல் துணியும் அவனே ஒற்றன்.

குறள் 588

ஒற்றொற்றித் தந்த பொருளையும்
மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்

மு.வ விளக்கம்:

ஒற்றன் கூறிய செய்தியை இன்னொரு ஒற்றர் மூலம் சரிபார்த்து ஒப்புமை கண்ட பிறகே உண்மையாக ஏற்க வேண்டும்.

குறள் 589

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்

மு.வ விளக்கம்:

ஒற்றரை மற்றொரு ஒற்றர் அறியாதாக வைத்துக் கொண்டு, மூவர் சொல்வதெல்லாம் ஒத்திருந்தால் அது உண்மை எனக் கொள்ளலாம்.

குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை

மு.வ விளக்கம்:

ஒற்றனின் திறனை வெளிப்படையாக சிறப்புசெய்தால், மறைவாக இருக்க வேண்டிய ரகசியம் வெளிப்படையாகிவிடும்.