திருக்குறள் மாணவர் மன்றம் கன்னியாகுமரி மாவட்டம்
அறத்துப்பால்
மனிதன் எப்படிப் வாழ வேண்டும், எத்தகைய ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறும் பகுதி தான் அறத்துப்பால்.
- கடவுள் வாழ்த்து
- வான்சிறப்பு
- நீத்தார் பெருமை
- அறன் வலியுறுத்தல்
- இல்வாழ்க்கை
- வாழ்க்கைத் துணைநலம்
- மக்கட்பேறு
- அன்புடைமை
- விருந்தோம்பல்
- இனியவை கூறல்
- செய்ந்நன்றியறிதல்
- நடுவு நிலைமை
- அடக்கம் உடைமை
- ஒழுக்கம் உடைமை
- பிறனில் விழையாமை
- பொறையுடைமை
- அழுக்காறாமை
- வெஃகாமை
- புறங்கூறாமை
- பயனில சொல்லாமை
- தீவினையச்சம்
- ஒப்புரவறிதல்
- ஈ.கை
- புகழ்
- அருளுடைமை
- புலால் மறுத்தல்
- தவம்
- கூடா ஒழுக்கம்
- கள்ளாமை
- வாய்மை
- வெகுளாமை
- இன்னா செய்யாமை
- கொல்லாமை
- நிலையாமை
- துறவு
- மெய்யுணர்தல்
- அவா அறுத்தல்
- ஊழ்
அதிகாரம் 3 : நீத்தார் பெருமை
குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
ஒழுக்கத்தில் நிலைத்து ஆசைகளை விட்டவர்களின் பெருமையைச் சொல்லும் நூல், மிக உயர்ந்த நூலாகும்.
குறள் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறந்தவர்களின் பெருமையை அளக்க முயல்வது, உலகத்தில் இறந்தவர்களை எண்ணுவது போல முடியாத ஒன்று.
குறள் 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்குற்று உலகு.
இம்மை, மறுமை என்ற இரு நிலைகளையும் உணர்ந்து அறத்தை மேற்கொண்டவர்களின் பெருமை உலகத்தில் விளங்கும்.
குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
மன உறுதியெனும் கட்டுப்பாட்டால் ஐம்புலன்களையும் காப்பவன், உயர்ந்த வாழ்விற்கான விதை போன்றவன்.
குறள் 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐம்புலன்களையும் அடக்கியவரின் ஆற்றல், வானுலக அரசனான இந்திரனின் ஆற்றலுக்கும் மேற்பட்டதாகும்.
குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செய்ய முடியாத கடினமான செயல்களைச் செய்வோர் பெரியவர்கள்; செய்ய முடியாதவர்கள் சிறியவர்கள்.
குறள் 27
சுவையொளி ஊறோசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தின் இயல்பை அறிந்தவன் உலகத்தை உணர்ந்தவன் ஆவான்.
குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
நிறைந்த மொழியுடைய சான்றோரின் பெருமையை, உலகில் நிலைத்திருக்கும் அவர்களின் மறைமொழி காட்டும்.
குறள் 29
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
நல்ல குணங்களால் உயர்ந்த நிலையில் இருப்பவர் கோபத்தை ஒரு கணம் கூட தக்க வைத்துக்கொள்வது அரிது.
குறள் 30
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லா உயிர்களிடமும் அன்பும் நல்லொழுக்கமும் கொண்டு நடப்பவர்களே உண்மையான அந்தணர் ஆவார்கள்.